Asianet News TamilAsianet News Tamil

ரஞ்சி கோப்பை: விதர்பாவிடம் போராடித் தோற்ற கர்நாடகா; அடுத்து டெல்லியை சந்திக்கிறது விதர்பா...

Ranji Trophy Karnataka to defeat Vidarbha Vidarbha meets Delhi
Ranji Trophy Karnataka to defeat Vidarbha Vidarbha meets Delhi
Author
First Published Dec 22, 2017, 10:44 AM IST


ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் விதர்பா 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கர்நாடகத்தை தோற்கடித்து. அடுத்ததாக வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் டெல்லியை சந்திக்கிறது விதர்பா.

கொல்கத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய 2-வது அரையிறுதியில் விதர்பா - கர்நாடக அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த விதர்பா முதல் இன்னிங்ஸில் 61.4 ஓவர்களில் 185 ஓட்டங்களுக்கு சுருண்டது. சர்வதே அதிகபட்சமாக 47 ஓட்டங்கள் எடுத்தனர்.

கர்நாடக தரப்பில் மிதுன் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய கர்நாடகம், 100.5 ஓவர்களில் 301 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. கருண் நாயர் 153 ஓட்டங்கள் விளாசினார்.

விதர்பா வீரர் குர்பானி 5 விக்கெட்களை எடுத்தார்.

முதல் இன்னிங்ஸில் 116 ஓட்டங்கள் பின்தங்கிய விதர்பா, 2-வது இன்னிங்ஸில் 84.1 ஓவர்களில் 313 ஓட்டங்கள் எட்டியது. அணியில் அதிகபட்சமாக கணேஷ் சதீஷ் 81 ஓட்டங்கள் விளாசினார்.

கர்நாடகா தரப்பில் வினய் குமார், ஸ்டூவர்ட் பின்னி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையடுத்து 198 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய கர்நாடகம் புதன்கிழமை முடிவில் 43 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

கடைசி நாளான நேற்றைய ஆட்டத்தை கேப்டன் வினய் குமார் 19 ஓட்டங்கள் , கோபால் ஒரு ஓட்டத்துடன் தொடங்கினர்.
இந்த இணையில் வினய் குமார் 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்தவர்களில் மிதுன் 33 ஓட்டங்கள் , அரவிந்த் 2 ஓட்டங்களில் நடையைக் கட்டினர். இறுதிய்ல் 59.1 ஓவர்களில் 192 ஓட்டங்களுக்கு சுருண்டது கர்நாடகம்.

கோபால் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

விதர்பா தரப்பில் குர்பானி 7 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இரு இன்னிங்ஸ்களிலுமாக மொத்தம் 12 விக்கெட்டுகள் வீழ்த்திய குர்பானி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அடுத்ததாக வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் டெல்லியை சந்திக்கிறது விதர்பா.

Follow Us:
Download App:
  • android
  • ios