Asianet News TamilAsianet News Tamil

முதல் இன்னிங்ஸில் தூக்கி அடித்தது மும்பை; 406 ஓட்டங்கள் குவிப்பு…

rang out-in-the-first-innings-mumbai-concentration-of-4
Author
First Published Jan 4, 2017, 12:12 PM IST


ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் தமிழகத்தை எதிர்கொண்டுள்ள மும்பை, முதல் இன்னிங்ஸில் 150.3 ஓவர்களில் 406 ஓட்டங்கள் குவித்தது.

இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் தமிழக அணியை விட மும்பை 101 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது மும்பை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழகம், 115.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மும்பை, 2-ஆம் நாளான திங்கள்கிழமை முடிவில் 60 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

3-ஆம் நாள் ஆட்டத்தை அந்த அணியின் ஆதித்யா தாரே 19, ஸ்ரேயாஸ் ஐயர் 24 ஓட்டங்களுடன் தொடர்ந்தனர். இதில் அரைசதம் கடந்த ஆதித்யா 83 ஓட்டங்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் 36 ஓட்டங்களில் வீழ்ந்தார்.

தொடர்ந்து வந்த அபிஷேக் 58, பல்வீந்தர் சாந்து 32, ஷர்துல் தாக்குர் 52, அகஷய் கிரப் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 150.3 ஓவர்களில் 406 ஓட்டங்களை எட்டிய நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது மும்பை.

தமிழக தரப்பில் விஜய் சங்கர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios