ramkumar is in advanced indian tennis player praised
தமிழகத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ராம்குமார் ராமநாதன் தரவரிசையில் முன்னேற்றப் பாதையில் இருக்கிறார் என்று இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி கூறினார்.
இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
"ராம்குமார் இந்த சீசன் முழுவதுமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அடுத்த இரண்டு ஆண்டுகள் அவருக்கு முக்கியமானவையாக இருக்கும்.
இளம் வீரரான அவரது முன்னேற்றத்துக்கு சிறிது காலம் தேவைப்படும். தனக்குத் தகுந்த பயிற்சியாளரை தற்போது தேர்வு செய்துள்ள அவர், சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
எனவே, தரவரிசையின் முதல் 100 இடங்களுக்குள்ளாக அவர் முன்னேற இது சரியான தருணமாகும்" என்று மகேஷ் பூபதி கூறினார்.
சென்னையைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன், ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் தற்போது 148-ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
