rajpoot scold shikhar dhawan viral video
ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. 132 என்ற எளிய இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி, 119 ரன்களுக்கே ஆல் அவுட்டானதால், 13 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ராஜ்பூட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவர் தான் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். ஷிகர் தவானை அவுட்டாக்கிய பிறகு, ஆக்ரோஷமாக ராஜ்பூட் கெட்ட வார்த்தை பேசினார். இந்திய அணியின் சீனியர் வீரரான ஷிகர் தவானை அவுட்டாக்கிவிட்டு, ராஜ்பூட் கெட்ட வார்த்தை பேசியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்துவரும் வீரரான ராஜ்பூட் சிறப்பாக பந்துவீசுகிறார். இளம் வீரரான அவர், ஆக்ரோஷத்தை வேறுவிதமாக வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் கெட்ட வார்த்தை பேசியிருப்பது விரும்பத்தகாத நிகழ்வு.
ஷிகர் தவானை அவுட்டாக்கியதும் அவர் ஆக்ரோஷமாக கெட்ட வார்த்தை பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="und" dir="ltr"><a href="https://t.co/c2oMiAyEFq">https://t.co/c2oMiAyEFq</a></p>— vineet kishor (@vineetkishor2) <a href="https://twitter.com/vineetkishor2/status/989522934979903488?ref_src=twsrc%5Etfw">April 26, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
