raina revealed the truth of csk dressing room
ஐபிஎல் 11வது சீசனில் இரண்டு ஆண்டுகள் களமிறங்கிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. சென்னை அணியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரான ரெய்னா, கோப்பையை வென்றதற்கு பிறகு ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் சென்னை அணி வீரர்கள் குறித்து நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றிற்கெல்லாம் ரெய்னா, ஒளிவுமறைவில்லாமல் நேரடியாக பதிலளித்தார்.
யார் நல்ல எண்டெர்டெயினர் என்ற கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் பிராவோ என்று கூறிவிட்டார் ரெய்னா.
டிரெஸிங் ரூமில் யார் அதிகம் பேசுபவர் யார் என்று கேட்டதற்கு ரவீந்திர ஜடேஜா என ரெய்னா பதிலளித்துள்ளார்.
அதிகம் படிக்கக்கூடியவர்கள் யாருமே கிடையாது. பேருந்து, விமானம் ஆகியவற்றில் பயணிக்கும்போது நாங்கள் எல்லாருமே இயர்போனுடன் தான் இருப்போம். பேருந்துக்கோ அல்லது வீரர்கள் ஒன்றுகூடுகையிலோ எப்போதுமே தாமதமாக கடைசி நொடியில் வருவது வாட்சன் தான் என ரெய்னா கூறியுள்ளார்.
பொதுவாக கலகலப்பாக நகைச்சுவையாக பேசுவது ஹர்பஜன் சிங் என்று கூறிய ரெய்னா, சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு தோனி தான் என்று அடுத்த நொடியே கூறிவிட்டார்.
ஐபிஎல்லில் சிறந்த பவுலர் என்ற கேள்விக்கு, புவனேஷ்வர் குமார் தான் சிறந்த பவுலர். புத்திக்கூர்மையுள்ள பவுலர் அவர் என தெரிவித்தார்.
