Rahul Dravid is the best player in the U-19.

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படும் இளம் வீரர்கள் என்று முதல் தர கிரிக்கெட்டுக்கு முன்னேறலாம் என்று இந்திய யு-19 அணி பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறினார்.

யு-19 உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணி இன்று நியூஸிலாந்து புறப்படுகிறது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் திராவிட் இதுகுரித்து கூறியது:

"இந்த உலகக் கோப்பை போட்டியானது இளம் வீரர்களுக்கு உற்சாகமான சவால் அளிப்பதுடன், அவர்களுக்கான நல்லதொரு வாய்ப்பாகும்.

அவர்கள் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் யு-19 அணியிலிருந்து முதல் தர கிரிக்கெட், பின்னர் அங்கிருந்து இந்திய 'ஏ' அணி, அதையடுத்து தேசிய அணி என முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அவர்கள் அடுத்த 6-8 மாதங்களில் இந்திய 'ஏ' அணிக்கு முன்னேறினால் அது சிறப்பான ஒன்று. இப்போட்டியை அதற்கான படிக்கட்டுகளாகப் பார்க்கிறோம் என்று ராகுல் திராவிட் கூறினார்.