Asianet News TamilAsianet News Tamil

படுதோல்வியை பரிசாக தந்த ஒற்றை பந்து!! ஆட்டத்தை புரட்டி போட்ட ஷிகர் தவான்

rahane missed dhawan catch
rahane missed dhawan catch
Author
First Published Apr 10, 2018, 11:43 AM IST


ஐபிஎல் 11வது சீசனில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் 11வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி திரில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த போட்டிகளில் டெல்லி அணியை பஞ்சாப் அணியும் பெங்களூரு அணியை கொல்கத்தா அணியும் வீழ்த்தி அபார வெற்றி பெற்றன.

இதையடுத்து நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணி வீரர்கள், பெரிதாக ஆடாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். சஞ்சு சாம்சன் மட்டும் நிதானமாக ஆடி 49 ரன்கள் எடுத்தார். அரைசதம் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டு 49 ரன்களில் அவுட்டானார்.

20 ஓவர் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

126 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் சஹா களமிறங்கினர். குல்கர்னி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ஷிகர் தவான் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே தவறவிட்டார். அதன்பிறகு சுதாரித்து கொண்ட தவான், அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

ஷிகர் தவானும் கேன் வில்லியம்சனும் இணைந்து 16வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டினர். சஹாவின் விக்கெட்டை மட்டுமே ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.  9 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார் குல்கர்னி. அந்த ஓவரின் கடைசி பந்தில் தவான் கொடுத்த கேட்சை ரஹானே பிடித்திருந்தால், ஹைதராபாத் அணிக்கு அழுத்தம் அதிகமாயிருக்கும். எளிதான இலக்கு என்பதால் ஹைதராபாத் அணி எட்டிவிடும் என்றாலும், அந்த கேட்சை பிடித்திருந்தால் வெற்றியை நெருங்கும் அளவுக்கு ராஜஸ்தான் சென்றிருக்கலாம் அல்லது ஹைதராபாத் அணிக்கு அழுத்தத்தை அதிகமாக்கியிருக்கலாம். ஆனால், அந்த கேட்சை விட்டதும் அதிரடியாக ஆடிய தவான் அபார வெற்றிக்கு அழைத்து சென்றார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios