சதமடிப்பதற்கு முன்னதாகவே சதத்தை கடந்துவிட்டதாக நினைத்து ரஹானே, பேட்டை உயர்த்தி கொண்டாடிய சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.  

சதமடிப்பதற்கு முன்னதாகவே சதத்தை கடந்துவிட்டதாக நினைத்து ரஹானே, பேட்டை உயர்த்தி கொண்டாடிய சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

தியோதர் டிராபி இறுதி போட்டியில் இந்தியா பி அணியை வீழ்த்தி ரஹானே தலைமையிலான இந்தியா சி அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா சி அணியின் கேப்டன் ரஹானே மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடித்தனர். அதனால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 352 ரன்களை குவித்தது. 

353 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா பி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தனி ஒருவனாக போராடி சதமடித்தார். எனினும் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்ததால் இலக்கை அந்த அணியால் எட்டமுடியவில்லை. அதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா சி அணி தியோதர் டிராபி தொடரை கைப்பற்றியது. 

அந்த போட்டியில், இந்தியா சி அணியின் இன்னிங்ஸின் போது, 97 ரன்களில் இருந்த ரஹானே சதமடித்து விட்டதாக நினைத்து பேட்டை உயர்த்தி கொண்டாட தொடங்கினார். அப்போது பெவிலியனில் இருந்த ரெய்னா, இன்னும் 3 ரன்கள் தேவை என்று சைகை காட்டினார். அதன்பின்னர் தான் இன்னும் சதம் அடிக்கவில்லை என்பதை உணர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

View post on Instagram