Rafael Natal has achieve 34 years no one did it
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் ஜான் மெக்கன்ரோவின் 34 ஆண்டுக்கால சாதனையை முறியடித்தார் உலகின் முதல்நிலை வீரர் ரஃபேல் நடால்.
1984-ஆம் ஆண்டு மாட்ரிட் ஓபன் போட்டியில் களிமண் தரை டென்னிஸ் மைதானத்தில் அமெரிக்காவின் ஜான் மெக்கன்ரோ தொடர்ந்து 49 செட்களை குவித்திருந்தார்.
இந்த சாதனையை கடந்த 34 ஆண்டுகளாக யாரும் முறியடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் போட்டியில் நடால் 6-3, 6-4 என்ற கணக்கில் டிகோ வார்ட்ஸ்மேனை வென்றார்.
இதன்மூலம் அவர் களிமண் தரையில் தொடர்ந்து 50 செட்களை வென்று மெக்கன்ரோவின் சாதனையை முறியடித்தார்.
இதுகுறித்து நடால், "எனது டென்னிஸ் ஆட்டம் முடிவுக்கு வரும்போது இத்தகைய சாதனைகள்தான் அனைவரது நினைவுக்கும் வரும். இவை பெரிய சாதனைகள். தொடர்ந்து 50 செட்களை வெல்வது என்பது சற்று சிரமமான ஒன்றாகும். ஆனால், நான் செய்து முடித்துள்ளேன்" என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.
