Quality trainers are important to create the best players - VVSLasmon Open Dog ...
சிறந்த வீரர்களை உருவாக்க, தரமான பயிற்சியாளர்கள் முக்கியமான தேவையாகும் என்று இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர் விவிஎஸ்.லஷ்மண் கூறினார்.
இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர் விவிஎஸ்.லஷ்மண் மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
“கபில் தேவை கண்டறிந்து, அவரை சிறந்த வீரராக உருவாக்கி அரியாணாவுக்காக ஆடச் செய்த தேஷ் பிரேம் ஆஸாதுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கவில்லை.
சச்சின் டெண்டுல்கரை மேம்படுத்தியது அவரது பயிற்சியாளர் ரமாகந்த் ஆச்ரேகர் தானே தவிர, சிவாஜி பூங்கா மைதானம் அல்ல.
என்னைப் பொருத்த வரையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, தரமான பயிற்சியாளர்களை ஏற்படுத்துவதிலும் கொடுக்க வேண்டும். இதை பிசிசிஐயிடமும் பரிந்துரைத்துள்ளோம்.
சாதனை படைத்த வீரர்களிடம் கேட்டால், தங்களுக்கு தந்தை அல்லது சகோதரரைப் போன்ற பயிற்சியாளர் கிடைத்ததாக கூறுவார்கள்.
எனவே, சிறந்த வீரர்களை உருவாக்க, தரமான பயிற்சியாளர்கள் முக்கியமான தேவையாகும்” என்று அவர் கூறினார்.
