கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் மரியா ஷரபோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோகா நகரில் கடந்த நேற்று இரவு நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 92-வது இடத்தில் இருக்கும் மோனிகாவை தரவரிசையில் 41-வது இடத்தில் இருக்கும் ஷரபோவா எதிர்கொண்டார்.

முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் எளிதில் அவர் கைப்பற்றியபோதிலும், திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய மோனிகா 2-வது செட்டை 6-4 என்ற கணக்கில் தன் வசப்படுத்தினார்.

இதையடுத்து, வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி செட் ஆட்டத்திலும் செட்டை கைப்பற்ற முடியாமல் ஷரபோவா போராடித் தோற்றார். இதையடுத்து, அவர் முதல் சுற்றுடன் கத்தார் ஓபனில் இருந்து வெளியேறினார்.

இப்படி, கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ரஷியாவின் மரியா ஷரபோவா 6-4, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் மோனிகா நிகுலஸ்குவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.