Pyongyang Winter Olympic Games Gold Won American Witch Worth ...
பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ஸ்னோபோர்டு பிரிவில் அமெரிக்க வீரர் ரெட்மான்ட் ஜெரார்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதன், 2-வது நாளில் 6 பதக்க போட்டிகள் நடைபெற்றன. பையத்லான், கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங், ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங், லூக், ஸ்னோபோர்டு, ஸ்பீட் ஸ்கேட்டிங் ஆகிய போட்டிகளில் பதக்கத்துக்கான சுற்றுகள் நடைபெற்றன.
இதில் ஆடவருக்கான ஸ்னோபோர்டு போட்டியில் ஸ்லோப் ஸ்டைல் பிரிவில் அமெரிக்காவின் ரெட்மன்ட் ஜெரார்டு 87.16 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
கனடா அடுத்த இரு இடங்களை தக்கவைத்துக் கொண்டது. அந்நாட்டின் மேக்ஸ் பேரட் 86 புள்ளிகளுடன் வெள்ளியும், மார்க் மெக் மோரிஸ் 85.20 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.
2-வது நாளில் நார்வே ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் மற்றும் கனடா 2 வெள்ளி, 2 வெண்கலம் என அதிகபட்சமாக 4 பதக்கங்கள் வென்றன.
நேற்றைய முடிவில் பதக்கப் பட்டியலில் ஜெர்மனி 3 தங்கம், 1 வெண்கலம் என்று 4 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
நெதர்லாந்து 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என்று 5 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், நார்வே 1 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என்று 8 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
