punjab and bengaluru compete for tamil players

11வது சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் இரண்டு தமிழக வீரர்களை பெங்களூரு அணி எடுத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

11வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 7 இந்திய வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

அவர்களில் முரளி விஜயை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. சென்னையின் செல்லப்பிள்ளையான ரவிச்சந்திரன் அஷ்வினை பஞ்சாப் அணியும் தினேஷ் கார்த்திக்கை கொல்கத்தா அணியும் ஏலத்தில் எடுத்தன.

கடந்த ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக விளையாடிய தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை ரூ.3.2 கோடிக்கு பெங்களூரு அணி எடுத்தது. வாஷிங்டன் சுந்தரை எடுக்க பஞ்சாப் மற்றும் பெங்கள்ளூரு அணிகள் ஆர்வம் காட்டின. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இறுதியில், பெங்களூரு அணி வாஷிங்டன் சுந்தரை ரூ.3.2 கோடிக்கு வாங்கியது.

அதேபோல, மற்றொரு தமிழக வீரரான முருகன் அஷ்வினை எடுக்கவும் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் கடுமையாக போட்டி போட்டன. முருகனையும் பெங்களூரு அணியே எடுத்தது. முருகனை ரூ.2.2கோடிக்கு பெங்களூரு அணி எடுத்தது. 

இளம் தமிழக வீரர்களை எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டாத நிலையில், தமிழக வீரர்களுக்கு பஞ்சாபும் பெங்களூருவும் முக்கியத்துவம் கொடுத்தன.