Pune Open Tennis Indian players advanced to the next round by an intense match
புனே ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் தொடக்கச் சுற்றில் அசத்தலான ஆட்டத்தால் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
புனே ஓபன் டென்னிஸ் போட்டியில் உடற்தகுதி பிரச்சனை காரணமாக இந்த சீசனில் தடுமாறி வந்த சாகேத் மைனேனி தனக்கு வழங்கப்பட்ட வைல்டு கார்டு வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
இந்தப் போட்டியின் தொடக்கச் சுற்றில் போஸ்னியா வீரரான டொமிஸ்லாவ் பிரிகிசுடன் மோதினார் சாகேத் மைனேனி. இதில், 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் மைனேனி வெற்றிப் பெற்றார்.
அதேபோல், ஸ்ரீராம் பாலாஜி தனது தொடக்கச் சுற்றில் எகிப்தின் கரீம் முகமது மாமுடன் மோதினார். இதில், 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கரீம் முகமது மாமுனை வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு முன்னேறினார் ஸ்ரீராம் பாலாஜி.
