புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியில் தமிழ் தலைவாஸ் - யு.பி.யோதா அணிகள் இடையிலான ஆட்டம் 33-33 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டி உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் அபாரமாக ஆடிய யு.பி.யோதா அணி 19-11 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

அடுத்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி அபாரமாக ஆடி 25-25 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

பின்னர் 31-29 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்ற தமிழ் தலைவாஸ் அணி, கடைசி நேரத்தில் சற்று சருக்கியது. உடனே சுதாரித்துக் கொண்டு ஆடிய யு.பி.யோதா அணி ஆட்டத்தை 33-33 என்ற கணக்கில் சமனில் முடித்தது.