Asianet News TamilAsianet News Tamil

புரோ கபடி அப்டேட்: 26-20 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லியை பந்தாடியது குஜராத்…

Pro kabaddi update 26-20 points accounted for Delhi
Pro kabaddi update 26-20 points accounted for Delhi
Author
First Published Aug 2, 2017, 9:23 AM IST


புரோ கபடி லீக் போட்டியின் 7-வது ஆட்டத்தில் 26-20 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லியை பந்தாடியது புதிய அணியான குஜராத் ஃபார்ச்சூன்ஸ்.

புரோ கபடி லீக் போட்டியின் 7-வது ஆட்டத்தில் தபாங் டெல்லியும், புதிய அணியான குஜராத் ஃபார்ச்சூன்ஸ் அணியும் மோதின.

இதில் ஆரம்பம் முதலே அசத்தத் தொடங்கிய குஜராத், ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் டேக்கிள் புள்ளி மூலம் தனது கணக்கை தொடங்கியது.

பின்னர், ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் டெல்லி தனது முதல் புள்ளியை பெற்றது. எனினும், 8 நிமிடங்களுக்குள்ளாக குஜராத் அணி 4-1 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் 'டெக்னிகல்' புள்ளி குஜராத்துக்கு கிடைக்க, முதல் பாதி நிறைவில் 15-5 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது அந்த அணி.

இரண்டாவது பாதியில் குஜராத்தின் ராகேஷ் நர்வால் ஒரு ரைடு பாய்ண்ட் அடித்தார். 28 நிமிடங்களில் 20-8 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் முன்னிலையிலேயே இருந்தது. தொடர்ந்த ஆட்டத்தில் குஜராத் 6 புள்ளிகளும், டெல்லி 12 புள்ளிகளும் பெற்றன.

இறுதியில் குஜராத் 26 - 20 என்ற கணக்கில் வென்றது.

ஆட்ட நாயகனாக குஜராத் வீரர் ஃபாஸல் அட்ராசலி தேர்வாகினார்.

இதில் குஜராத் தரப்பில் சச்சின் மூன்று ரைடு புள்ளிகள் பெற்றார். அந்த அணியின் தடுப்பாட்டக்காரர் ஃபாஸல் அட்ராசலி நான்கு புள்ளிகள் எடுத்தார். குஜராத்துக்கு ஆல் அவுட் புள்ளிகள் 4 கிடைத்தன.

டெல்லி தரப்பில் ரைடர் ஸ்ரீராம் ஐந்து புள்ளிகளும், தடுப்பாட்டக்காரர் சுனில் இரண்டு புள்ளிகளும் பெற்றனர்., டெல்லிக்கு ஆல் அவுட் புள்ளிகள் 2-ம் கிடைத்தன.

Follow Us:
Download App:
  • android
  • ios