புரோ கபடி போட்டியின் 49-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை 32-26 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

புரோ கபடி போட்டியின் 49-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் இடையேயான ஆட்டம் நேற்று இரவு மும்பையில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய பெங்கால் அணி முதல் பாதியில் 11-9 என முன்னிலை பெற்றிருந்தது. பின்னர் நடைபெற்ற ஆட்டத்திலும் அந்த அணி சிறப்பாக செயல்பட, இறுதியில் 32-26 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.

இதில், பெங்கால் வாரியர்ஸ் 17 ரைடு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது.

பெங்களூரு புல்ஸ் அணி, 15 ரைடு புள்ளிகள், 10 டேக்கிள் புள்ளிகள், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது.

பெங்கால் தரப்பில் அதிகபட்சமாக அதன் ரைடர் ஜாங் குன் லீ 11 ரைடுகளில் 6 புள்ளிகள் பெற்றார். தடுப்பாட்டக்காரர் சுர்ஜீத் சிங் 8 டேக்கிள் புள்ளிகள் பெற்றார்.

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக, அதன் கேப்டன் ரோஹித் குமார் 7 ரைடு புள்ளிகள் பெற்றார். தடுப்பாட்டக்காரர் குல்தீப் சிங் 5 டேக்கிள் புள்ளிகள் பெற்றார்.