Pro Kabaddi Tamil talaivas team has lost to Bengaluru bulls

புரோ கபடி லீக் போட்டியின் 12-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியிடம் 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி போராடித் தோற்றது.

புரோ கபடி லீக் போட்டியின் 12-வது ஆட்டம் பெங்களூர் புல்ஸ் – தமிழ் தலைவாஸ் இடையே நாகபுரியில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய பெங்களூரு புல்ஸ் அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 23-8 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதனால் அந்த அணி அபார வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பின்னர் சரிவில் இருந்து மீண்ட தமிழ் தலைவாஸ் அணி அபாரமாக ஆடியது. ஆட்டத்தின் போக்கை மாற்றி தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்குர் தனது அபார ரைடால் புள்ளிகளைப் பெற்றுத்தர, பெங்களூருக்கு சிக்கல் ஏற்பட்டது.

எனினும், விடாப்பிடியாகப் போராடிய பெங்களூரு அணி இறுதியில் 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிக் கண்டது.

இதுவரை இரு ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது என்பது கொசுறு தகவல்.