புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 71-வது ஆட்டத்தில் புணேரி பால்டன் அணியை 24-20 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வென்றது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 71-வது ஆட்டத்தில் புணேரி பால்டன் அணி மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையே ஹரியாணா மாநிலம் சோனிபட்டில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் புணேரி அணி 10-8 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால், 2-வது பாதியில் ஆட்டம் தலைகீழாக மாறி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

பெங்களூரை, புணேரி அணி இரண்டு முறை ஆல் அவுட் செய்தும் வெற்றி என்னமோ பெங்களூர்க்கே கிடைத்தது.

இதில், பெங்களூரு வீரர் அஜய் குமார் 14 ரைடுகளில் 3 புள்ளிகளைப் பெற்றார். பின்கள வீரரான குல்தீப் சிங் 5 டேக்கிள் புள்ளிகளை வென்றார்.

புணே தரப்பில் அதன் ரைடர் தீபக் ஹூடா 14 ரைடுகளில் 2 புள்ளிகள் எடுத்தார். தடுப்பாட்டக்காரர் தர்மராஜ் சேரலாதன் 4 டேக்கிள் புள்ளிகள் பெற்றார்.

மொத்தமாக பெங்களூரு அணி 6 ரைடு புள்ளிகள், 15 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 கூடுதல் புள்ளி பெற்றது.

புணே தரப்பு 7 ரைடு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 2 கூடுதல் புள்ளிகள் பெற்றது.