Pro Kabaddi League Captain Rojith of Bengaluru bulls team Vice-captain Ravinder ...

புரோ கபடி லீக் ஐந்தாவது சீசன் போட்டியில் பங்கேற்கும் பெங்களூரு புல்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர ரைடர் ரோஹித் குமாரும், துணைக் கேப்டனாக பின்கள வீரர் ரவீந்தர் பாஹலும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

புரோ கபடி லீக் ஐந்தாவது சீசனில் பங்கேற்கும் பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:

ஹரிஷ் நாயக், ரோஹித் குருவிந்தர் சிங், அங்கித் சங்வான், மகேந்தர் சிங், பிரீத்தாம் சில்லார், ரவீந்தர் பாஹல், அமித், ரோஹித் குமார், ஆசிஷ் குமார், சச்சின் குமார், அமித் ஷெரோன், சினோதரன் கணேஷராஜா, பிரதீப், அஜய் குமார், சுநீல் சுமித், அஜய் ஷ்ரேஸ்தா, குல்தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

புரோ கபடி லீக் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது. ஐதராபாதில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், தெலுகு டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்திய கபடி அணியின் முன்னாள் வீரரும், அர்ஜுனா விருது பெற்றவருமான ரந்திர் சிங், பெங்களூரு அணியின் பயிற்சியாளராக உள்ளார் என்பது கொசுறு தகவல்.