புரோ கபடி லீக் தொடரில் டபாங் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பெங்களூரு, புனே, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. முதல் 41 போட்டிகள் பெங்களூருவிலும், அதற்கடுத்த போட்டிகள் புனேவிலும் நடக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த சீசனில் டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ், புனேரி பல்தான் அணிகள் சிறப்பாக ஆடிவருகின்றன. 

டி20 உலக கோப்பை: இந்திய பேட்ஸ்மேன்களை எச்சரிக்கும் தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் அன்ரிக் நோர்க்யா

இன்று பெங்களூருவில் நடந்த முதல் போட்டியில் டபாங் டெல்லி மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இரண்டுமே வலுவான அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருந்தது. இரு அணிகளுமே அதிகமாக புள்ளிகளை பெற்றன. கடைசியில் பெங்களூரு புல்ஸ் அணி 47-43 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

இந்த போட்டியில் தோற்ற டபாங் டெல்லி அணி புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. புனேரி பல்தான் 3ம் இடத்திலும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 4ம் இடத்திலும் உள்ளன.

டி20 உலக கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

இன்று நடந்த மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸும் தெலுங்கு டைட்டன்ஸும் மோதின. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 30-19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.