புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியில் குஜராத் பார்ச்சூன் ஜயன்ட்ஸ் - அரியாணா ஸ்டீலர்ஸ் அணிகள் இடையே நடந்த விறுவிறுப்பான ஆட்டம் சமனில் முடிந்தது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியில் குஜராத் பார்ச்சூன் ஜயன்ட்ஸ் - அரியாணா ஸ்டீலர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் ஐதராபாதில் நேற்று நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆடின. ஆட்டம் ஆரம்பித்த இரண்டு நிமிடங்களில் இரு அணிகளின் ரைடும் வெறுமையாகவே அமைந்தன.

மூன்றாவது நிமிடம் குஜராத் முதல் புள்ளியைப் பெற ஆட்டம் சூடுபிடித்தது. அதன்படி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 11-8 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது குஜராத்.

பிறகு நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் அரியாணா சரிவிலிருந்து மீண்டு முன்னிலையை நோக்கி நகர்ந்தது. இரு அணிகளும் நானா? நீயா/ போட்டி போட்டுக் கொண்டு முன்னேறியது.

32-ஆவது நிமிடத்தில் குஜராத் அணி 22-17 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் கடைசி 5 நிமிடங்களில் அரியாணா அணி 13 புள்ளிகளைக் கைப்பற்றியது.

இறுதியில் 27-27 என்ற புள்ளிகள் கணக்கில் இந்த ஆட்டம் சமனில் முடிந்தது.