உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. 

இந்த தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக இஷாந்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய இஷாந்த், அதன்பிறகு டி20 போட்டிகளில் ஆடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு டி20 போட்டிகளில் களமிறங்கும் இஷாந்த் சர்மா, டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், மும்பை அணி நிர்வாகமும் 15 வீரர்களை கொண்ட அணியை அறிவித்துள்ளது. கடந்த சீசனில் முதல் சுற்றிலேயே வெளியேறியது மும்பை அணி. 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்ற மும்பை அணி, முதல் சுற்றில் வெளியேறியது. கடந்த சீசனில் ஆதித்ய டரே கேப்டனாக செயல்பட்ட நிலையில், இம்முறை ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் காயமடைந்த பிரித்வி ஷா, காயத்திலிருந்து குணமடைந்த நிலையில், மும்பை அணியில் இணைந்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர், குல்கர்னி ஆகியோரும் அணியில் உள்ளனர்.

15 வீரர்களை கொண்ட மும்பை அணி:

ரஹானே(கேப்டன்), பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், குல்கர்னி, சித்தேஷ் லத், ஆதித்ய டரே, சூர்யகுமார் யாதவ், ஆகாஷ் பர்கார், கேர்கார், துர்மில் மத்கார், ஷாம்ஸ் முலானி, ஷுப்மன் ரஞ்சனி, தேஷ்பாண்டே, ரோய்ஸ்டான் டியாஸ்.