Premier Badminton League Mumbai won 4-1 over Delhi
பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியின் 3-வது ஆட்டத்தில் மும்பை ராக்கெட்ஸ் அணி 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லி டேஷர்ஸ் அணியை வென்றது.
பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியின் 3-வது ஆட்டம் குவாஹாட்டியில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஒன்றில் மும்பை ராக்கெட்ஸின் சமீர் வர்மா 15-11, 15-12 என்ற செட் கணக்கில் டெல்லி டேஷர்ஸ் அணியின் வோங் விங் கி வின்சென்டை வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.
மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவில் டெல்லி டேஷர்ஸ் வீரர் டியான் ஹெவெய் 13-15, 15-13, 15-9 என்ற செட் கணக்கில் மும்பை ராக்கெட்ஸை சேர்ந்தவரும், உலகின் முதல் நிலை வீரருமான சன் வான் ஹோவை வீழ்த்தினார்.
அதேபோன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் டெல்லியின் சங் ஜி ஹியூன் 12-15, 15-14, 15-9 என்ற செட் கணக்கில் மும்பையின் பெய்வென் ஜாங்கை வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் மும்பை ராக்கெட்ஸ் அணியின் பூன் ஹியோங் டான் - லீ யோங் டே இணை 14-15, 15-14, 15-10 என்ற செட் கணக்கில் டெல்லி டேஷர்ஸ் அணியின் இவான் சோúஸானோவ் - விளாதிமீர் இவானோவ் இணையை வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டமான கலப்பு இரட்டையர் பிரிவில் மும்பை ராக்கெட்ஸின் லீ யோங் டே - கேப்ரியேலா ஸ்டோவா இணை 15-11, 15-9 என்ற செட் கணக்கில் டெல்லியின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - ஆரத்தி சாரா சுனில் இணையை வீழ்த்தி வெற்றி அடைந்தது.
