Premier Badminton League Bangalore defeat delhi
பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி 5-2 என்ற கணக்கில் டெல்லியை வீழ்த்தியது அசத்தியுள்ளது.
பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியின் பிரதான ஆட்டங்களில் ஒன்றான மகளிர் ஒற்றையர் பிரிவில் டெல்லியின் சங் ஜி ஹியூன் 15-10, 8-15, 15-5 என்ற செட் கணக்கில் கிறிஸ்டி கில்மோரை வென்றார்.
இதேபோல ஆடவர் ஒற்றையர் பிரிவு பிரதான ஆட்டத்தில் பெங்களூரு வீரர் விக்டர் அக்ஸல்சென் 15-11, 15-11 என்ற செட் கணக்கில் டெல்லியின் டியான் ஹெளவேயை வென்றார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு பிளாஸ்டர்சின் சோங் வெய் ஃபெங் 10-15, 15-13, 15-8 என்ற செட் கணக்கில் டெல்லி டேஷர்ஸின் வோங் விங் கி வின்சென்டை வென்றார்.
இதேபோல ஆடவர் இரட்டையர் பிரிவில் பெங்களூர் இணையான மதியாஸ் போ - கிம் சா ராங் 15-9, 15-12 என்ற செட் கணக்கில் டெல்லி இணையான இவான் சோஸானோவ் - விளாதிமீர் இவானோவை வென்றது.
அதேபோன்று கலப்பு இரட்டையர் பிரிவில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியின் கிம் சா ராங் - சிக்கி ரெட்டி இணை 15-10, 12-15, 15-11 என்ற செட் கணக்கில் டெல்லி டேஷர்ஸ் அணியின் விளாதிமீர் இவானோவ் - அஸ்வினி பொன்னப்பா இணையை வென்றது.
