Asianet News TamilAsianet News Tamil

பிரீமியர் பாட்மிண்டன் லீக்: நான்காவது ஆட்டத்தில் அகமதாபாத் அணி முன்னிலை; பின்னுக்கு தள்ளப்பட்டது நார்த் ஈஸ்டர்ன்...

Premier Badminton League Ahmedabad lead in the fourth match North Eastern
Premier Badminton League Ahmedabad lead in the fourth match North Eastern
Author
First Published Dec 27, 2017, 10:40 AM IST


பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியின் 4-வது ஆட்டத்தில் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணியை விட 3-1 என்ற கணக்கில் முன்னிலையில்  இருக்கிறது அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணி.

பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியின் 4-வது ஆட்டம் குவாஹாட்டியில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணி வீரர் எஸ்.வர்மா 15-10, 15-7 என்ற செட் கணக்கில் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணியின் பி.ஜோஷியை வீழ்த்தினார்.

கலப்பு இரட்டையர் பிரிவில், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணியின் பி.சாவந்த் - எஸ்.பி.சியோல் இணை அகமதாபாதின் கே.ஆர் ஜுல் - ரெக்னல்ட் இணையை 15-13, 15-13 என்ற கணக்கில் வீழ்த்தியது.

அதேபோன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் அகமதாபாதின் டி.டி.யிங் 15-6, 15-10 என்ற செட் கணக்கில் நார்த் ஈஸ்டர்னின் எம்.லீயை வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணி 3-1 என்ற கணக்கில் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணியை விட முன்னிலையில் இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios