preity zinta opinion about virat kohli
இந்திய கேப்டன் விராட் கோலியை நடிகையும் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களின் ஒருவருமான பிரீத்தி ஜிந்தா ஒற்றை வார்த்தையில் புகழ்ந்துள்ளார்.
பெங்களூரு, பஞ்சாப், டெல்லி ஆகிய 3 அணிகள் மட்டுமே இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதே இல்லை. இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய இந்த மூன்று அணிகள், இந்த முறையும் அந்த வாய்ப்பை தவறவிட்டன. புள்ளி பட்டியலில் கடைசி மூன்று இடங்களை பிடித்த பெங்களூரு, பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகள், பிளே ஆஃபிற்கு தகுதி பெறாமல் வெளியேறின.
பிளே ஆஃபிற்கு தகுதி பெற முடியாமல் போனதற்காக பஞ்சாப் அணி ரசிகர்களிடம் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு டுவிட்டரில் பதிலளித்து வருகிறார்.
அப்போது, ரசிகர் ஒருவர், விராட் கோலியை பற்றி பிரீத்தி ஜிந்தாவிடம் கருத்து கேட்டார். அதற்கு ஒற்றை வார்த்தையில் கோலியை புகழ்ந்துள்ளார் பிரீத்தி ஜிந்தா. விராட் கோலி குறித்த கேள்விக்கு, அவர் அற்புதமானவர் (He is awesome) என புகழ்ந்துள்ளார்.
சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விராட் கோலி. கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் பிளே ஆஃபிற்கு தகுதி பெறாமல் வெளியேறியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப ஆடாததற்காக கோலியும் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
