Players must continue to play the rest

தொடர்ச்சியான போட்டிகளால் விளையாடுபவர்களுக்கு கண்டிப்பாக ஓய்வு அவசியம். எப்போது எனது உடலும் சோர்வாக காணப்படுகிறதோ, அப்போது நிச்சயம் நானும் ஓய்வு கேட்பேன் எனவும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாக தோனி விளங்கி வந்தார். சில நாட்களுக்கு முன்பு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

அவரையடுத்து அந்த பதவிக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். தோனியின் தீவிர ரசிகரான கோலி கேப்டனாக இருந்தாலும் தோனியை எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்லை. 

இந்நிலையில், இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஒவ்வொரு வீரரும் ஆண்டுக்கு 40 கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதாகவும் நிச்சயம் அனைவருக்கும் ஓய்வு தேவை எனவும் தெரிவித்தார். 

மேலும் தொடர்ச்சியான போட்டிகளால் விளையாடுபவர்களுக்கு கண்டிப்பாக ஓய்வு அவசியம் எனவும் எப்போது எனது உடலும் சோர்வாக காணப்படுகிறதோ, அப்போது நிச்சயம் நானும் ஓய்வு கேட்பேன் எனவும் குறிப்பிட்டார்.