நாமக்கல்லில் நடைப்பெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில், நாமக்கல் கராத்தே வீரர்கள் சாம்பியன் பட்டம் வென்று தங்களது ஊரின் பெயரைக் காப்பாற்றினர்.
எஸ்.எஸ்.கே.ஏ. கராத்தே பயிற்சிப் பள்ளியின் சார்பில், மாநில அளவிலான கராத்தே சாம்பியன் போட்டி நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
வயது, பெல்ட் மற்றும் உடல் எடைப் பிரிவின் கீழ் கட்டா, குமட்டே, கோபுடு பிரிவிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
மாநிலம் முழுவதும் இருந்து 10 முதல் 50 வயது வரை உள்ள 650-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் நாமக்கல் மாவட்ட சோட்டோ - சோட்டோக்கான் அமைப்பைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
சேலம் குப்புராஜ் தலைமையிலான புனோகுச்சி கராத்தே சங்கம் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.
திருச்சி வாசுதேவன் தலைமையிலான சீட்டுரியூ கராத்தே சங்கம் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
அதிகப் புள்ளிகள் எடுத்த காவ்யா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் வரும் மார்ச் மாதம் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் தெற்காசிய கராத்தே போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.
