சனிக்கிழமை பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் மகளிர் ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் இந்தியாவின் ருபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

சனிக்கிழமை பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் மகளிர் ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் இந்தியாவின் ருபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். எட்டு பெண்கள் பங்கேற்ற இறுதிப் போட்டியில் 211.1 புள்ளிகள் எடுத்து முதல் மூன்று இடங்களுக்குள் பிரான்சிஸ் இடம் பிடித்தார். முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றில் ஏழாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற பிரான்சிஸின் இந்த சாதனை, பாரிஸ் பாராலிம்பிக்கில் துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவுக்கு 4ஆவது பதக்கத்தையும், ஒட்டுமொத்தமாக 5ஆவது பதக்கத்தையும் பெற்றுத் தந்தது.

Scroll to load tweet…
Scroll to load tweet…

வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் அவனி லெகாரா மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிளில் தனது தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்து வரலாறு படைத்தார். டோக்கியோ பாராலிம்பிக்கில் இதே பிரிவில் தங்கம் வென்றார். அதே போட்டியில் சக துப்பாக்கி சுடும் வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பதக்கம் வென்று கொடுத்தார். மேலும், மணீஷ் நர்வால் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (SH1) பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்தார்.

SH1 வகுப்பில், வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளை எந்த சிரமும் இல்லாமல் பிடித்துக்கொண்டு, நின்று அல்லது அமர்ந்த நிலையில், சக்கர நாற்காலி அல்லது நாற்காலியில் இருந்தும் சுட அனுமதிக்கப்படுகிறார்கள். இது போட்டியாளர்களின் பல்வேறு திறன்களை எடுத்துக்காட்டுகிறது.