பாராலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற வீரர், வீராங்கணைகளுக்கு பரிசுத் தொகையை அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளாக தொழிலதிபராக விளங்கும் இந்தியாவைச் சேர்ந்த முக்கட்டு செபாஸ்டியன் இந்த பரிசுகளை அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிரேசிலின் ரியோ-டி-ஜெனீரோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், சேலத்தைச் சேர்ந்த டி.மாரியப்பன், உயரம் தாண்டுதலில் (6.2 அடி), தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.

இதேபோல், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாவுக்கும் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது.

குண்டு எறிதலில் வெள்ளி வென்ற தீபா மாலிக்கிற்கு ரூ.3 லட்சம், உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற வருண் சிங்குக்கு ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளதாக செபாஸ்டியன் அறிவித்துள்ளார்.