Pakistani spinner suspended for third time Action ...
விதிமுறைகளை மீறி பந்து வீசியதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஹஃபீஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மூன்றாவது முறையாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
அதில் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஹஃபீஸின் பந்துவீச்சு முறை விதிகளை மீறிய வகையில் இருந்தது என்று போட்டி அதிகாரிகள் புகார் தெரிவித்திருந்தனர். விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்கும் அதிமாக கையை சுழற்றி ஹஃபீஸ் பந்து வீசியனார் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, அவரது பந்து வீச்சை ஆய்வு செய்தபோது, அவர் விதிமுறைகளை மீறியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
எனவே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்" என்று ஐசிசியின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முகமது ஹஃபீஸ், இதே தவறுக்காக முன்பு 2 முறை இடைக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
