செஸ் போட்டி கலந்து கொள்ள தமிழகம் வந்திருந்த பாகிஸ்தான் வீரர்களை மீண்டும் அந்த நாடு திரும்ப அழைத்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
செஸ் போட்டி கலந்து கொள்ள தமிழகம் வந்திருந்த பாகிஸ்தான் வீரர்களை மீண்டும் அந்த நாடு திரும்ப அழைத்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில் கலந்து கொள்ள ஆசையாக வந்த வீரர்களை அந்நாட்டு அரசு விளையாட்டைப் புறக்கணித்து விட்டு வரும்படி கூறியதால், அவர்கள் இரவோடு இரவாக புறப்பட்டுச் சென்றனர்.
உலகப் புகழ்பெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. பிரதமர் மோடி இந்த போட்டியை தொடங்கி வைத்தார், நேரு விளையாட்டு அரங்கில் கோலாகலமாக அதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் மற்றும் நாடுகளின் அணிவகுப்பு நேற்று நடைபெற்றது.

மொத்தம் 189 நாடுகள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளன, சுமார் 2000 ஆயிரம் வீரர்கள் விளையாட உள்ளனர். போட்டியில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் நேற்று காலை 19 பேர் புனேவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
இதையும் படியுங்கள்: காமன்வெல்த் போட்டிகள் 2022 கோலாகல தொடக்க விழா! பி.வி.சிந்து, மன்ப்ரீத் சிங் தலைமையில் அணிவகுத்த இந்திய அணி
அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு அதிகாரிகளும், ஒலிம்பியாட் வரவேற்பு குழுவினரும் வரவேற்றனர். அங்கிருந்து சொகுசு வாகனங்களில் அவர்கள் தங்கும் இடமான சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள சிறுசேரியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படியுங்கள்: தமிழகத்திற்கு செஸ் விளையாட்டுடன் வரலாற்றுத் தொடர்பு உள்ளது.. தமிழர் பெருமையை பரைசாற்றிய மோடி.
அவர்களுக்கு மதிய உணவு உபசரிக்கப்பட்டது, நட்சத்திர விடுதியில் 19 பேரும் தங்கியிருந்த நிலையில் திடீரென விடுதியை காலி செய்து விட்டு சொகுசு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்த அவர்கள் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து இரவு 11 மணிக்கு புனே சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறினார். தமிழக அதிகாரிகள் அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக அவர்களிடத்தில் கேட்டபோது பாகிஸ்தான் நாட்டு அரசு செஸ் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் எனக் கூறியதாகவும், போட்டியை புறக்கணித்து விட்டு வரும்படி கூறிவிட்டதாகவும் எனவே திரும்பி செல்வதாகவும் அவர் கூறினர்.
பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் ஆசையாக விளையாட வந்து நிலையில் அந்நாட்டு அரசு அவர்களை திரும்ப அழைத்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்த தெரிவித்து வரும் பலரும், போட்டியை போட்டியாக பார்க்க வேண்டும் விளையாட்டில் பகை பாராட்டக் கூடாது, வந்தவர்களை வரவேற்று உபசரிப்பது இந்தியாவின் கலாச்சாரம், விளையாட்டில் பழைய பாராட்டுவதுதான் பாகிஸ்தான் கலாச்சாரமா என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
