pakistan fans behave illegal with ganguly

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் காரை மறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இடையூறு செய்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மினி உலக கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டத்தைக் காண இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிக உள்ளனர்.

சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்து விளையாடி வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-பாஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டி முடிவடைந்ததும், பாகிஸ்தான் ரசிகர்கள் மைதானத்துக்கு வெளியே வெற்றியைக் கொண்டாடி ஆரவாரம் செய்தனர்.

அப்போது, அந்த வழியே இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி காரில் சென்றுள்ளார். வெற்றி மகிழ்ச்சியில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் கங்குலியைப் பார்த்ததும், அவரது காரை வழிமறித்துள்ளனர். அதுமட்டுமன்றி பாகிஸ்தான்... பாகிஸ்தான் என்று கோஷம் எழுப்பியும் உள்ளனர்.

மேலும், கங்குலியின் கார் மீது பாகிஸ்தானின் தேசியைக் கொடியை வீசியும், காரை முற்றுகையிட்டனர் பாகிஸ்தான் ரசிகர்கள். ஆனாலும், பாகிஸ்தான் ரசிகர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டாலும் சவுரவ் கங்குலி, முகம் சுழிக்காமல் அவர்களைப் பார்த்து சிரித்தவாரே அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டார்.