pakistan coach challenge kohli in vadivel style

அனைத்து சர்வதேச அணிகளுக்கும் எதிராக சதமடித்துள்ள விராட் கோலியால், தற்போதைய பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதமடிக்க முடியாது என பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஒவ்வொரு போட்டியிலும் ஒரு சாதனையை படைத்து சர்வதேச அளவில் மிகச்சிறந்த வீரராக வலம்வரும் இந்திய கேப்டன் கோலியை சர்வதேச அளவிலான முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

சதங்களை வாரிக்குவித்து வரும் கோலி, இதுவரை ஒருநாள் போட்டியில் 34 சதங்களை அடித்துள்ளார். கேப்டனாக அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் கோலி, விரைவில் முதலிடம் பிடித்துவிடுவார். 

அனைத்து சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு எதிராகவும் சதமடித்துள்ளார் கோலி. தென்னாப்பிரிக்க தொடரில் அசத்தலாக ஆடிவரும் கோலிக்கு, பாகிஸ்தான் பயிற்சியாளர் சவால் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பயிற்சி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் தான். அவர் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்திருக்கலாம். ஆனால், தற்போதைய பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவரால் சதம் அடிக்க முடியாது. எங்கள் அணிக்கு எதிராக கோலி சதமடிப்பது கடினம் என தெரிவித்துள்ளார்.

நகரம் திரைப்படத்தில், எங்க ஏரியாவுக்கு வந்து பாருடா பார்ப்போம்.. என சுந்தர்.சி-க்கு வடிவேல் சவால் விடுப்பதை போலவே பாகிஸ்தான் பயிற்சியாளரின் சவால், கிரிக்கெட் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் கோலிக்கு அவர் சவால் விடுத்துள்ளார். தற்போது இருப்பதை விட முன்பு பாகிஸ்தான் அணி சிறந்து விளங்கியபோதே கோலி அந்த எணிக்கு எதிராக சதங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.