நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால், அதன் கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓர் ஆண்டுக்குள் இரண்டாவது முறையாக பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதன் காரணமாக அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்கு பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தில் அந்த அணி 2 ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது.
அதைத்தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக்கிற்கு அவருடைய போட்டி ஊதியத்தில் 40 சதவீதமும், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த எஞ்சிய வீரர்களுக்கு அவர்களுடைய போட்டி ஊதியத்தில் தலா 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மிஸ்பா உல் ஹக்கின் மாமா இறந்துவிட்டதால் அவர் ஏற்கெனவே பாகிஸ்தான் திரும்பிவிட்டார். அதனால் 2-ஆவது டெஸ்டில் விளையாடும் சூழலில் அவர் இல்லை. எனவே இப்போது விதிக்கப்பட்டுள்ள தடையால் அவருக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
