பும்ராவை போலவே பாகிஸ்தானில் 5 வயது சிறுவன் ஒருவன் பவுலிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சிறப்பாக உள்ளது. புவனேஷ்வர் குமார், பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி, கலீல் அகமது என இந்திய அணி நல்ல கலவையிலான வேகப்பந்து யூனிட்டை பெற்றுள்ளது.

இவர்களில் பும்ரா வித்தியாசமான பவுலிங் ஸ்டைலை கொண்டவர். புதிய பந்து, பழைய(தேய்ந்த) பந்து என இரண்டிலுமே அருமையாக வீசக்கூடியவர் பும்ரா. இந்திய அணியின் நட்சத்திர பவுலராக திகழ்கிறார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விதமாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

அந்தளவிற்கு இந்திய அணியின் முக்கியமான பவுலராக பும்ரா திகழ்கிறார். ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். அண்மையில் பும்ராவின் பவுலிங் ஸ்டைலை பாகிஸ்தான் முன்னாள் பவுலர் ஜாவித் விமர்சித்திருந்தார். பும்ரா அவரது ஸ்டைலில் தொடர்ந்து பந்துவீசினால் அடிக்கடி காயமடைய நேரிடும் என கருத்து தெரிவித்திருந்தார். மற்றவர்களின் விமர்சனங்களுக்கு செவி மடுப்பதில்லை என்றும் தனது ஸ்டைலிலேயே தான் தொடர்ந்து வீசப்போவதாகவும் பதிலடி கொடுத்திருந்தார்.

 

இந்நிலையில், பும்ராவைப் போலவே பாகிஸ்தானில் 5 வயது சிறுவன் ஒருவன் பந்துவீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த சிறுவன் பும்ராவை போலவே ஓடிவந்து பந்துவீசுகிறான். இது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.