பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு ஒவ்வொருவரும் கார்களை பரிசாக அறிவித்து வருகின்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸீல் நடைபெற்ற 33ஆவது ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கம் வென்று சாதனை படைத்தார். கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பங்கேற்ற அர்ஷத் நதீம் 92.97மீ தூரம் எறிந்து சாதனை படைத்தார். இந்த தொடரில் அதிகபட்சமாக 92.97மீ தூரம் எறிந்த வீரர் என்ற சாதனையை படைத்ததோடு 90மீக்கும் அதிகமான தூரம் எறிந்தவர்களின் பட்டியலில் 6ஆவது இடம் பிடித்தார். 40 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு முதல் முறையாக அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார்.

ஒலிம்பிக்கில் சாதனை படைத்த தங்க மருமகனுக்கு எருமை மாடு பரிசளித்த மாமனார் – பாகிஸ்தான் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

சுஸூகி ஆல்டோ கார்: பரிசு நம்பர் 1:

தங்கப் பதக்கத்துடன் நாடு திரும்பிய அர்ஷத் நதீமிற்கு நாடு முழுவதும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு, அரசு மற்றும் முன்னணி நிறுவனங்களை பரிசுகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், பாகிஸ்தானிய அமெரிக்க தொழிலதிபர் அலி ஷேகானி அர்ஷத் நதீமிற்கு புத்தம் புதிய சுஸூகி ஆல்டோ காரை பரிசாக அறிவித்துள்ளார்.

சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்த நீரஜ் சோப்ராவின் ஒமேகா வாட்ச் – விலை, சிறப்பம்சம் என்ன?

Scroll to load tweet…

பரிசு நம்பர் 2: எருமை மாடு

அர்ஷத் நதீமின் மாமனார் எருமை மாடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து நதீமின் மாமனார் முகமது நவாஸ் கூறியிருப்பதாவது: எங்களது கிராமத்தில் எருமை மாட்டை பரிசாக அளிப்பது எனது, ஒருவருக்கு செல்வம், மற்றும் மகிழ்ச்சி என்றைக்கும் நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதனால், தான் நான் எருமை மாட்டை பரிசாக அளித்தேன் என்று கூறியுள்ளார்.

Scroll to load tweet…

பரிசு நம்பர் 3: கார் மற்றும் பெட்ரோல் அல்லது டீசல்

GO பெட்ரோல் பம்பின் COO ஜீஷன் தய்யாப் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு புத்தம் புதிய கார் ஒன்றை பரிசாக அறிவித்ததோடு வாழ்நாள் முழுவதும் இலவச எரிபொருளை அறிவித்துள்ளார்.

Scroll to load tweet…

பரிசு நம்பர் 4: சுஸூகி ஆல்டோ கார்

ஜேடிசி அறக்கட்டளையின் நிறுவனர் ஜாபர் அப்பாஸ் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு புதிதாக சுஸுகி ஆல்டோ காரை பரிசாக அறிவித்துள்ளார்.

Scroll to load tweet…

பரிசு நம்பர் 5: வரி இல்லை

அர்ஷத் நதீமின் ஒலிம்பிக் பரிசுத் தொகைக்கு வரி இல்லை என்று FBR உறுதிப்படுத்தியுள்ளது. தங்கப் பதக்கம் வென்றவருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு வரி விதிக்கப்படாது.

Scroll to load tweet…