Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சுருண்டது பாகிஸ்தான்…

pakistan all-out-of-the-australian-bowlers-unable-to-co
Author
First Published Dec 31, 2016, 12:34 PM IST

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. முன்னதாக இந்தப் போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் இன்னிங்ஸில் 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்த பாகிஸ்தான், 2-ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 163 ஓட்டங்களில் சுருண்டது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 91 பந்துகளில் 7 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் குவித்ததோடு, 36 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 126.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 443 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அசார் அலி ஆட்டமிழக்காமல் 205 ஓட்டங்கள் குவித்தார். ஆஸ்திரேலியத் தரப்பில் ஹேஸில்வுட், ஜாக்சன் பேர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய ஆஸ்திரேலிய அணி 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 113.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 465 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 100, மிட்செல் ஸ்டார்க் 7 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

ஸ்டார்க் சிக்ஸர் மழை: கடைசி நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் அசத்தலாக ஆடினார். யாசிர் ஷா பந்துவீச்சை பந்தாடிய ஸ்டார்க், அவ்வப்போது சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இதனால் அவர் 69 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.

தொடர்ந்து வேகம் காட்டிய மிட்செல் ஸ்டார்க், அசார் அலி ஓவரில் இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

மறுமுனையில் நிதானமாக ஆடிய கேப்டன் ஸ்மித், யாசிர் ஷா பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 234 பந்துகளில் 150 ஓட்டங்களை எட்டினார்.

தொடர்ந்து வேகமாக ஓட்டங்கள் சேர்த்த ஸ்டார்க், சோஹைல் கான் பந்துவீச்சில் சிக்ஸரை அடிக்க முயன்றார். ஆனால் பந்து, ஸ்கொயர் லெக் திசையில் நின்ற ஆசாத் ஷபிக் கையில் தஞ்சம் புகவே, ஸ்டார்க் ஆட்டமிழந்தார். அவர் 91 பந்துகளில் 84 ஓட்டங்கள் குவித்தார். ஸ்டார்க்-ஸ்மித் ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 154 ஓட்டங்கள் சேர்த்தது.

பின்னர் வந்த நாதன் லயன் 12 ஓட்டங்களில் நடையைக் கட்ட, டிக்ளேர் செய்வதாக அறிவித்தது ஆஸ்திரேலியா. அப்போது அந்த அணி 142 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 624 ஓட்டங்கள் குவித்திருந்தது. கேப்டன் ஸ்மித் 246 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 165 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர், யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், வஹாப் ரியாஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 181 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடியது பாகிஸ்தான். அப்போது கடைசி நாள் ஆட்டத்தில் 70 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்ததால் இந்த போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அபாரமாக பந்து வீசிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தனர். பாகிஸ்தான் தொடக்க வீரர் சமி அஸ்லாம் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹேஸில்வுட் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுக்க, பின்னர் வந்த பாபர் ஆஸம் 3 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய யூனிஸ்கான் (24), கேப்டன் மிஸ்பா உல் ஹக் (0), ஆசாத் ஷபிக் (16) ஆகியோரை நாதன் லயன் வீழ்த்தினார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் தடுப்பாட்டம் ஆடிய அசார் அலி 112 பந்துகளில் 43 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் 6-ஆவது விக்கெட்டாக வெளியேற, பாகிஸ்தானின் தோல்வி உறுதியானது.

பின்னர் வந்தவர்களில் விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் அஹமது மட்டுமே 43 ஓட்டங்கள் எடுத்தார். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, பாகிஸ்தான் 53.2 ஓவர்களில் 163 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இவ்விரு அணிகள் இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 3-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios