ottansaththiram for Women bangalore for men team won the kabadi championship
தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில், மகளிர் பிரிவில் ஒட்டன்சத்திரம் வெண்ணிலா கபடி அணியும், ஆடவர் பிரிவில் பெங்களூரு விஜயா வங்கி அணியும் வாகை சூடி அசத்தின.
தென்னிந்திய அளவிலான கபடி போட்டி, தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் கொடுக்கூரில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி தொடங்கியது.
இதில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மகளிர் பிரிவில் 17 அணிகளும், ஆடவர் பிரிவில் 21 அணிகளும் கலந்து கொண்டன.
நாக்-அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் திங்கள்கிழமை நடைபெற்ற மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒட்டன்சத்திரம் வெண்ணிலா கபடி அணியும், தென்னக மத்திய இரயில்வே ஐதராபாத் அணியும் எதிர்கொண்டன.
இதில், ஒட்டன்சத்திரம் வெண்ணிலா கபடி அணி 33 - 30 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப் பெற்று வாகைச் சூடியது.
அதேபோன்று, ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெங்களூரு விஜயா வங்கி அணியும், பெங்களூரு சுங்கத்துறை அணியும் எதிர்கொண்டன.
இந்த ஆட்டத்தில் பெங்களூரு விஜயா வங்கி அணி 46 - 36 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு சுங்கத்துறை அணியை தோற்கடித்து வாகைச் சூடியது.
வெற்றி பெற்ற ஒட்டன்சத்திரம் வெண்ணிலா கபடி அணி மற்றும் பெங்களூரு விஜயா வங்கி அணிக்கும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன கௌரவிக்கப்பட்டன.
