இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை ஏற்கெனவே வென்றுள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி நாளை இந்தூரில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி பங்கேற்கிறது.
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, தர்மசாலாவில் வரும் 16-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது
செய்தியாளர்களைச் சந்தித்த தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத், மகேந்திர சிங் தோனி தலைமையிலான ஒருநாள் கிரிக்கெட் அணியை அறிவித்தார். தோனி கேப்டனாக நீடிப்பார் என்றும், விராத் கோலி துணைக்கேப்டானாக செயல்படுவார் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த ஒருநாள் தொடருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு சுரேஷ் ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் இடம் பிடித்திருப்பது அவரது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் சுரேஷ் ரெய்னாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஒரு நாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி:
தோனி (C & wk)
ரோகித் ஷர்மா
ரஹானே
விராட் கோலி
மணிஷ் பாண்டே
ரெய்னா
ஹர்திக் பாண்டியா
அக்ஷர்
ஜெயந்த் யாதவ்
மிஷ்ரா,
பும்ரா
தவால் குல்கர்னி
உமேஷ் யாதவ்
மந்தீப் சிங்
கேதார் ஜாதவ்
