இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலை வகித்துவரும் நிலையில் மூன்றாவது போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்துவருகிறது. 

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி மாற்றங்களுடன் களமிறங்கிய நிலையில், நியூசிலாந்து அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. 

இந்திய அணியின் சீனியர் வீரரும் விக்கெட் கீப்பருமான தோனிக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் ஆடுகிறார். சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு மீண்டும் இந்திய அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கருக்கு பதிலாக ஆடுகிறார். 

நியூசிலாந்து அணி, கடந்த போட்டியில் ஆடிய அந்த அணியின் ஆல்ரவுண்டர் கோலின் டி கிராண்ட்ஹோமை நீக்கிவிட்டு சாண்ட்னெரை சேர்த்துள்ளது. சாண்ட்னெர் முதல் போட்டியில் ஆடினார். பின்னர் இரண்டாவது போட்டியில் அவருக்கு பதிலாக கிராண்ட்ஹோம் சேர்க்கப்பட்டார். 

ஆனால் இரண்டாவது போட்டியில் கிராண்ட்ஹோம் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சோபிக்கவில்லை. 8 ஓவர்கள் வீசி 62 ரன்களை விட்டுக்கொடுத்தாரே தவிர ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. பேட்டிங்கிலும் 3 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியது மட்டுமல்லாமல் தோனியின் கேட்ச்சை கோட்டைவிட்டு ஃபீல்டிங்கிலும் சொதப்பினார். அதனால் இந்த போட்டியில் அவர் நீக்கப்பட்டு மீண்டும் சாண்ட்னெர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

நியூசிலாந்து அணி:

கப்டில், முன்ரோ, வில்லியம்சன்(கேப்டன்), டெய்லர், லதாம், நிகோல்ஸ், சாண்ட்னெர், பிரேஸ்வெல், இஷ் சோதி, ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்.