On June 14 India-Afghanistan match first Test match Where do you know
ஜூன் 14-ஆம் தேதி இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் ஜுன் மாதம் எந்தவொரு டெஸ்ட் போட்டியும் நடந்ததில்லை. இதற்கு முன்பு பாகிஸ்தான், ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியுள்ளன. இந்த வரிசையில் ஆப்கானிஸ்தானும் இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதையடுத்து தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது ஆப்கானிஸ்தான்.
2019-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது டெஸ்ட் போட்டியை ஆப்கானிஸ்தான் விளையாடவிருந்தது. ஆனால், இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே வரலாற்று ரீதியிலான உறவு உள்ளதால் ஆப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இந்தியா முடிவெடுத்தது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து சாஹா காயம் காரணமாக விலகியுள்ளார்.
இதனையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் மற்றொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
