Oman Open Table Tennis indian plyaer won Gold

ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுஹானா சாய்னி தங்கப் பதக்கம் வென்றார்.

ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சுஹானா பங்கேற்று இறுதி ஆட்டம் வரை சென்றார்.

அவர் தனது இறுதி ஆட்டத்தில் எகிப்தின் ஹனா கோடாவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய சுஹானா, சற்று பின்னடைவை சந்திக்க ஹனா கோடா 12-10 என முதல் செட்டை கைப்பற்றினார்.

எனினும், அடுத்த 3 செட்களில் மீண்ட சுஹானா 11-7, 11-6, 11-8 என்ற கணக்கில் வென்று ஆட்டத்தை தன் வசமாக்கி தங்கத்தை கைப்பற்றினார்.

இந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றியின் மூலம் அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.