இலண்டன்,

நடைப்பெற்று வரும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடத்தை வெல்லப் போவது முர்ரேவா அல்லது ஜோகோவிச்சா?

உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இலண்டனில் நடந்து வருகிறது. டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த போட்டியில் சனிக்கிழமை இரவு நடந்த அரையிறுதியில் 5 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-1 என்ற நேர் செட்டில் நிஷிகோரியை (ஜப்பான்) வென்றார்.

மற்றொரு அரையிறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 5-7, 7-6 (7-5), 7-6 (11-9) என்ற செட் கணக்கில் 3 மணி 38 நிமிடங்கள் போராடி மிலோஸ் ராவ்னிக்கை (கனடா) தோற்கடித்தார்.

சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் பரம போட்டியாளர்களான ஜோகோவிச்சும், ஆன்டி முர்ரேவும் மோதுகிறார்கள்.

இதில் ஜோகோவிச் வெற்றி பெற்றால் மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்து விடலாம். முர்ரே வெற்றிக்கனியை பறித்தால், ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.