no csk players take place in dream eleven of sports portal
ஐபிஎல் 11வது சீசனை சென்னை அணி வென்றுள்ளது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
ஐபிஎல் 11வது சீசன் முடிவடைந்த நிலையில், கிரிக்கெட் கண்ட்ரி என்ற ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளம், ஐபிஎல் கனவு அணியை வெளியிட்டுள்ளது. அந்த அணியில், கோப்பையை வென்ற சென்னை அணியின் ஒரு வீரர் கூட இடம்பெறவில்லை.
சுனில் நரைன், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ள அந்த கனவு அணிக்கு வில்லியம்சன் கேப்டன்.
கனவு அணி:
சுனில் நரைன்(கொல்கத்தா), கே.எல்.ராகுல்(பஞ்சாப்), கேன் வில்லியம்சன்(கேப்டன், ஹைதராபாத்), ரிஷப் பண்ட்(டெல்லி), ஏபி டிவில்லியர்ஸ்(பெங்களூரு), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர், கொல்கத்தா), ஆண்ட்ரே ரசல்(கொல்கத்தா), ரஷீத் கான்(ஹைதராபாத்), ஆண்ட்ரூ டை(பஞ்சாப்), உமேஷ் யாதவ்(பெங்களூரு), பும்ரா(மும்பை)
