No better player than Dhoni - Ravi Shastri
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான எம்எஸ்.தோனியை விட சிறந்த வீரர் ஒருவர் கிடையாது என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் பங்களிப்பு குறித்து அஜித் அகர்கர், விவிஎஸ்.லஷ்மணன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்தனர்,
இந்த நிலையில் தோனிக்கு ஆதரவாக ரவி சாஸ்திரி, "தோனி குறித்து விமர்சிப்பவர்கள் தங்களது கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க வேண்டும். தோனி இந்திய கிரிக்கெட்டுக்காக அதிகம் பங்களிப்பு செய்துள்ளார். அவர் போன்ற ஒரு வீரருக்கு ஆதரவாக இருப்பது அணியின் கடமையாகும்.
களத்தில் தனது பேட்டாலும், சமயோசித செயல்பாட்டாலும் ஒரு விக்கெட்டை காப்பதற்கான ஆற்றலை வழங்குவதில் தோனியை விடச் சிறந்த ஒருவர் கிடையாது.
இந்திய அணியை பொருத்த வரையில், அதன் தற்போதைய கலாசாரமானது, செயல்திறன் மற்றும் தரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். தற்போதைய நிலையில் இந்த அணியை வழிநடத்துவது உலகில் மிகச்சிறந்த ஒன்றாகும். அதுவே, முந்தைய அணிகளுடன் ஒப்பிடுகையில் இந்த அணியை தனித்துக் காட்டுகிறது.
இந்த அணி எப்போதுமே வெற்றிக்காக தயாராக இருக்கிறது. அடுத்து வரும் ஒன்றரை மாதங்களில் நடைபெறும் தொடர்களில் வெற்றி கண்டு, அதே உத்வேகத்துடன் தென் ஆப்பிரிக்க தொடரை எதிர்கொள்வோம் என்று நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.
