New Zealand won by seven wickets
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றிப் பெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டம் வெல்லிங்டன் நகரில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.4 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 106 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் ஃபீல்ட் செய்ய தீர்மானித்தது. பேட் செய்த பாகிஸ்தான் அணியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. பாபர் ஆஸம் அதிகபட்சமாக 41 ஓட்டங்கள் எடுக்க, அடுத்த படியாக ஹசன் அலி 23 ஓட்டங்கள் சேர்த்தார்.
மீதமுள்ள வீரர்களில் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது உள்பட 6 பேர் ஒற்றை இலக்க ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர். உமர் அமின், ஷாதாப் கான் டக் அவுட் ஆகினர்.
நியூஸிலாந்து தரப்பில் சேத் ரேன்ஸ், டிம் செளதி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். சேன்ட்னர் 2 விக்கெட்கள் , அனாரு கிட்சன், காலின் மன்ரோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
பின்னர், பேட் செய்த நியூஸிலாந்தில் காலின் மன்ரோ - ராஸ் டெய்லர் வெற்றிக்கு வழிநடத்தினர். மன்ரோ 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 49 ஓட்டங்களும், ராஸ் டெய்லர் 3 பவுண்டரிகள் உள்பட 22 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தொடக்க வீரர் கப்டில் 2 ஓட்டங்கள், அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 3 ஓட்டங்கள், டாம் புரூஸ் 26 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினர்.
பாகிஸ்தான் தரப்பில் ருமன் ராயீஸ் 2 விக்கெட்கள், ஷாதாப் கான் ஒரு விக்கெட் எடுத்தனர்.
காலின் மன்ரோ ஆட்டநாயகன் ஆனார்.
இந்தப் போட்டியில் நியூஸிலாந்து வெற்றிப் பெற்றதையடுத்து மூன்று ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரில் அந்த அணி முன்னிலை வகிக்கிறது.
