New Zealand Open Badminton India Sai Praneet semi final break
நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத் அரையிறுதிக்கு அசத்தலாக முன்னேறி உள்ளார்.
நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளின் காலிறுதியில் மூன்றாம் நிலை வீரரான சாய் பிரணீத், இலங்கையின் நிலுக கருணாரத்னேவுடன் மோதினார்.
இதில், 21-7, 21-9 என்ற செட் கணக்கில் நிலுக கருணாரத்னேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பிரணீத்.
அரையிறுதியில் இரண்டாம் நிலை வீரர் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை அரையிறுதியில் பிரணீத் எதிர்கொள்கிறார்.
மற்றொரு இந்திய வீரரான சமீர் வர்மா இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான லின் டியானிடம் 19-21, 9-21 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்தார்.
அதேபோன்று, ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு அட்ரி - சுமித்ரெட்டி இணை 10-21, 15-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் இஸாரா - நிபிபோன் இணையிடம் தோற்றது.
