New Zealand first innings 268 all out ottankalukkuc

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 79.3 ஓவர்களில் 268 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்றுத் தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் ஹென்றி நிகோலஸ் 161 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 118 ஓட்டங்கள் குவித்தார். ஆனால் எஞ்சிய வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காததால் அந்த அணி 79.3 ஓவர்களில் 268 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜே.பி.டுமினி நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 24 ஓட்டங்கள் எடுத்தது.

ஸ்டீபன் குக் 3 ஓட்டங்கள், டீன் எல்கர் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

காகிசோ ரபாடா 8 ஓட்டங்களுடனும், ஆம்லா ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.

நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி, கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.